அதிர்ச்சி வீடியோ... எதிரி நாட்டு டிரோனை பதுங்கு குழிக்குள் எடுத்துச் சென்ற ரஷ்ய சிப்பாய் !
May 5, 2025, 13:00 IST
உக்ரைன் – ரஷ்யா போரில், ஒரு ரஷ்ய சிப்பாய் எதிரியின் டிரோனை தவறாகக் கையாண்டதால் அது வெடித்துவிட்டது. இது குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், சிப்பாய் ஒருவர் தன் பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்தார். வந்தவுடன் தரையில் விழுந்திருந்த ஒரு வெள்ளை டிரோனை எடுத்து உள்ளே செல்வதும், பிறகு பதுங்கு குழிக்குள் பயங்கர வெடிப்பு நிகழ்வதும் தெளிவாகக் காணப்படுகிறது.
இந்த வீடியோ உக்ரைனுக்கு ஆதரவாக செயல்படும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.அந்த வீடியோவில் பதுங்கு குழி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. சம்பவ இடம் மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ரஷ்ய சிப்பாய், கட்டுப்பாடு இழந்த டிரோனை ஆய்வு செய்ய நம்பிக்கையுடன் எடுத்திருக்கலாம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!