அதிர்ச்சி வீடியோ... அதிக சத்தத்துடன் ஸ்பீக்கரை அலற விட்டவரை ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட இளம்பெண்!
ரஷ்யாவில் இரவு நேரத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் சத்தமாகப் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரரின் செயலைத் தட்டி கேட்க, பெண் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவின் ஒரு குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவர், இரவு நேரத்தில் தனது வீட்டில் ஸ்பீக்கர்களை வைத்து அதிக சத்தத்துடன் இசை கேட்டுள்ளார். இதனால் தூக்கம் பாதிக்கப்பட்ட அவரது பக்கத்து வீட்டுப் பெண், பலமுறை அந்த நபரிடம் சத்தத்தைக் குறைக்குமாறு எச்சரித்துள்ளார். இருப்பினும், அந்த நபர் அந்தப் பெண்ணின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்தப் பெண், மது போதையில் இருந்தபோது தனது வீட்டில் இருந்த ஏகே 47 ரகத் துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார்.
அந்தப் பெண் ஆக்ரோஷமாகத் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தமாகப் பாட்டு கேட்டதற்குத் துப்பாக்கியால் சுட்டு எச்சரித்த அந்தப் பெண்ணின் செயல் ரஷ்யாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!