undefined

அதிர்ச்சி... மாந்திரீகம் செய்ததாகச் தம்பதியை கொன்று தீயிட்டுக் கொளுத்திய கிராம மக்கள்!

 

அசாம் மாநிலம் கர்பி அங்லாங் (Karbi Anglong) மாவட்டத்தில் உள்ள பெலுகுரி முண்டா என்ற குக்கிராமத்தில் இந்தச் சமூகம் சார்ந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கார்டி பிருவா (43) மற்றும் அவரது மனைவி மிரா பிருவா (33) ஆகியோர் மாந்திரீகச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் கிராமத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகவும் அங்குள்ள மக்கள் நீண்ட நாட்களாகச் சந்தேகித்து வந்துள்ளனர்.


நேற்று இரவு திரண்ட கிராம மக்கள், ஆத்திரத்தில் கார்டி பிருவாவின் வீட்டைச் சூறையாடினர். பின்னர், தம்பதி இருவரையும் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

தம்பதி நிலைகுலைந்து விழுந்த நிலையிலும் ஆத்திரம் தீராத கும்பல், அவர்கள் மீது எரிபொருளை ஊற்றி வீட்டு வாசலிலேயே தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். தகவல் கிடைத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள், தம்பதி இருவரும் உடல் கருகி உயிருடன் எரிந்து சாம்பலாகியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எஞ்சியிருந்த உடல் பாகங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் அங்கிருந்து ஆதாரங்களைச் சேகரித்துள்ளனர். இந்தப் படுகொலை தொடர்பாகக் கிராமத்தைச் சேர்ந்த சிலரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நவீன காலத்தில் இன்னும் இத்தகைய மூடநம்பிக்கைகளால் மனித உயிர்கள் பலியாவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!