அதிர்ச்சி..இளைஞர் மீது ஏறிய லாரி.. அதன் பிறகு ஓட்டுநர் செய்த கொடூரமான காரியம்!

 

இப்படி எல்லாமா மிருகத்தனமாக கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் இருப்பார்கள் என்று கேரளா மொத்தமும் அந்த சிசிடிவி காட்சியைப் பார்த்து ஆடி போயிருக்கிறது. வேகமாக தறிகெட்டு ஓடி வரும் லாரி ஒன்று, சாலையின் ஓரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் இளைஞர் மீது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஏறி இறங்குகிறது. லாரியின் சக்கரங்கள் மேலேறிய நிலையில், இளைஞர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடுகிறார். லாரி நிற்காமல் செல்கிறது. பின்னர், சிறிது தூரத்தில் நின்ற லாரியில் இருந்து இறங்கி வந்த ஓட்டுநர், இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவோ... முதலுதவி செய்யவோ சற்றும் முயலாமல், அவரை சாலையில் ஓரமாக இழுத்து போட்டு விட்டு,  மீண்டும் லாரியில் ஏறி தப்பி செல்கிறார்.

அப்படி  இரவு 11.30 மணிக்கு இளைஞரின் மீதேற்றி, சாலையின் ஓரமாக போட்டு சென்றதும், யாரும் கவனிக்காமல் முழு இரவும் இளைஞர் உயிருக்குப் போராடி அங்கேயே உயிரிழந்து விடுகிறார். சுமார் 9 மணி நேரம் இளைஞரின் சடலம் அப்படி சாலையின் ஓரத்திலேயே கவனிப்பாரற்று அல்லது கேட்பாரற்று கிடந்திருக்கிறது. 

தமிழகத்தில் இருந்து வாழை மரங்களையும், விதைப்பதற்காக வாழை விதைகளையும் கேரளாவுக்கு ஏற்றிச் சென்ற லாரி, கேரளாவில் அவற்றை இறங்கி விட்டு, மீண்டும் தமிழகத்திற்கு திரும்பும் வழியில் கேரள மாநிலம் கொட்டாரக்கரை பகுதியருகே நேற்றிரவு 11.30 மணியளவில் கடந்துள்ளது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில், தூங்கிக் கொண்டிருந்த ரதீஷ் என்ற இளைஞர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தார். பின்னர் லாரி சிறிது தூரம் சென்ற பிறகு சந்தேகமடைந்த லாரி டிரைவர் திரும்பி வந்தார். அப்போது, படுகாயமடைந்து உயிருக்கு போராடிய ரதீஷை பார்த்த லாரி ஓட்டுநர் அவரை சாலையின்  ஓரமாக இழுத்து மாற்றினார். பிறகு ஓட்டுநர் லாரியுடன் அங்கிருந்து தப்பினார். 

இந்நிலையில், நேற்று 8 மணியளவில் அவ்வழியாக சென்ற அப்பகுதி மக்கள் இளைஞர் ரதீஷின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரவு நேரத்தில் அருகில் உள்ள கடைகளுக்கு வந்த லாரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். 

அதில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த ஓட்டுநர் கிருஷ்ணகுமார் தான் இந்த கொடூர செயலுக்கு பின்னணியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், புத்தூர் பகுதியில் பதுங்கியிருந்த லாரி ஓட்டுநர் கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். 

ஓட்டுநரின் மனிதாபிமானமற்ற செயலால் ரத்தீஷின் மரணம் நடந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?