ஒரு ரூபாய்க்கு காலணி.. கடை திறப்பில் கூட்ட நெரிசல், போலீஸ் தடியடி!

 

கேரள மாநிலத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஷூ கடையில் போலீஸ் தடியடி ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கேரள மாநிலம்  கோழிக்கோட்டில் ஒரு ரூபாய்க்கு காலணிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.   வைக்கம் முகமது பஷீர் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஒரு கடை இந்த சலுகையை சமூக வலைத்தளங்களில் அறிவித்தது. ஒரு ரூபாய் நோட்டுடன் வரும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு விலையுயர்ந்த காலணிகள் வழங்கப்படும் என கூறப்பட்டதால் அதிகாலை 2 மணி  முதலே மக்கள் குவியத் தொடங்கினர்.

அதிகாலை 2 மணி முதல் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கடை முன்பு குவிந்தனர். நேரம் செல்லச் செல்ல  ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடத் தொடங்கினர். ங்களை எட்டியதால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடை திறந்ததும் அனைவரும் ஒரே நேரத்தில் உள்ளே செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நிலைமை கட்டுக்கடங்காமல் போனது.

இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் பலர் கீழே விழுந்து காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இத்தகைய விளம்பரம் வெளியிட்டதாக கூறி கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!