படப்பிடிப்பில் விபத்து! இயக்குநர் சுதா கொங்கராவுக்கு காயம்!
எத்தனைப் படங்களை இயக்குகிறோம் என்பதில் கிடையாது நமது வெற்றி. நாம செய்கிற ஒவ்வொரு படமுமே நம்ம மனசுல நிற்கணும். காலம் கடந்தும் நம்மளைப் பேசணும் எனும் கொள்கையைக் கொண்டவர் இயக்குநர் சுதா கொங்கரா. சினிமா எனும் மாயப் பிசாசிடம் போராடி ஜெயித்த வெகு சொற்ப பெண் இயக்குநர்களில் முக்கியமானவர் சுதா.
2010ல் வெளியான ‘துரோகி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான சுதா கொங்கரா, அதன் பின் 2016ல் ‘இறுதிச் சுற்று’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகப் பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து 2020ல் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர் மத்தியில் பெரும் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகின்றன. தற்போது சூர்யா நடித்துவரும் ‘சூர்யா 42’ படத்துக்கு பிறகு சூர்யா - சுதா கொங்கரா இணையும் படம் துவங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இருவரது ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், விபத்தில் காயமடைததாக, கையில் காயங்களுடன், முழுவதுமாக கட்டுப் போட்டு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ரொம்ப வலிக்கிறது. ஒரு மாத ஓய்வு. படப்பிடிப்புகளில் இருந்து பிரேக். இந்த மாதிரியான ஒரு ஓய்வை நான் எதிர்பார்க்கவில்லை என்று ஹேஷ்டேக்குடன் குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க