undefined

 மருத்துவமனை, வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு...  போலீஸ் மோதலில் 3 பேர் கைது!

 
 

ஹரியாணா மாநிலம் யமுனா நகர் பகுதியில் முகத்தை மூடிய நிலையில் மூன்று இளைஞர்கள் தனியார் மருத்துவமனைக்குள் சனிக்கிழமை இரவு நுழைந்தனர். பின்னர் அவர்கள் வரவேற்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். தொடர்ந்து அருகிலிருந்த வணிக வளாகத்திற்கும் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸார் பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை காலை யமுனா நகரின் கசன்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரையும் போலீஸார் சுற்றிவளைத்தனர். அப்போது போலீஸார் மீது குற்றம்சாட்டப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

போலீஸார் நடத்திய பதிலடி தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்தனர். மேலும், மற்றொரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்தார். மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களிடம் பயத்தை ஏற்படுத்தவே இந்தச் சம்பவம் நடந்ததாகவும், பணம் பறிப்பு சம்பந்தமாகவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!