undefined

  சட்டக் கல்லூரியில் துப்பாக்கிச் சூடு… மாணவி உயிரிழப்பு, மாணவன் தற்கொலை முயற்சி !

 

 பஞ்சாப் மாநிலம் தர்ன் தாரன் மாவட்டத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக மாணவி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கல்வி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உஸ்மா கிராமத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த பிரின்ஸ் ராஜ், வகுப்பறையில் சந்தீப் கௌர் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சந்தீப் கௌர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின் பிரின்ஸ் ராஜ் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்த பிரின்ஸ் ராஜ் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வகுப்பு தொடங்குவதற்கு முன்பே நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!