140 கோடி மக்களின் நம்பிக்கையை சுமந்து செல்லும் சுபான்ஷு சுக்லா... பிரதமர் மோடி!
Jun 25, 2025, 17:00 IST
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் இன்று பிற்பகல் 12.01க்கு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி பயணத் திட்டத்தின்படி பிறநாட்டு விண்வெளி வீரர்கள் 3 பேருடன் சுக்லாவும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி “இந்தியா, ஹங்கேரி, போலந்து, அமெரிக்க வீரர்களை ஏற்றிச் சென்ற விண்வெளிப் பயணத்தின் வெற்றிகரமான ஏவுதலை வரவேற்கிறோம் 1.4 பில்லியன் இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள், அபிலாஷைகளை தன்னுடன் சுமந்து செல்லும் சுபான்ஷு சுக்லாவுக்கும், மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!