undefined

 சுப்மன் கில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்... டெஸ்ட் தொடரில் இருந்து விலகல்? 

 
 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்தபோது கழுத்து வலி அதிகரித்ததால் இந்திய கேப்டன் சுப்மன் கில் மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சைமன் ஹார்மரின் பந்தை பவுண்டரிக்கு அடித்தவுடன் திடீரென கழுத்தை பிடித்தபடி வலியால் தவித்த கில்னுக்கு உடனே அணியின் பிசியோ சிகிச்சையளித்தார். எனினும் வலி குறையாததால் அவர் மீண்டும் களத்திற்கு வராமல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.

கொல்கத்தா மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்ட கில், டாக்டர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு தரப்பட்ட சிகிச்சை நிறைவடைந்ததால் மருத்துவமனை ஆட்சேபனையின்றி அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளார். உடல்நலத்தை கருத்தில் கொண்டு அடுத்த ஐந்து நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர் குழு அறிவுறுத்தியுள்ளது.

நேற்றைய போட்டியிலும் கில் ஆடவில்லை. மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகே தொடரின் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் பங்கேற்பாரா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கழுத்து வலி காரணமாக டெஸ்டில் இருந்து விலகும் நிலை இது இரண்டாவது முறையாகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!