வட சிக்கிமில் 'பகீர்' நிலச்சரிவு... 200 சுற்றுலா பயணிகள் மாயம்?  

 


சிக்கிம் மாநிலம் மங்கன் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகள், சுற்றுலாப் பயணிகளின் பயணத் திட்டத்தை அடியோடு சீர்குலைத்துள்ளது. சுங்தாங் - லாச்சென் இடையேயான முக்கிய வழித்தடத்தில் நேற்று   இரவு ஏற்பட்ட ராட்சத நிலச்சரிவுகளால், சுமார் 150 முதல் 200 சுற்றுலாப் பயணிகள் பாதியிலேயே சிக்கித் தவித்து வருகின்றனர்.

சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், நடுவழியில் தவித்த பயணிகளை மாவட்ட நிர்வாகமும், ஐடிபிபி  வீரர்களும் துரிதமாகச் செயல்பட்டு மீட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது சுங்தாங்கில் உள்ள ஐடிபிபி முகாம் மற்றும் அங்குள்ள ஒரு குருத்வாராவில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் போர்க்கால அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.

லாச்சென் செல்லும் பாதை இன்னும் சீரமைக்கப்படாத நிலையில், லாச்சுங் செல்லும் சாலை மட்டும் இன்று காலை சரிசெய்யப்பட்டது. அங்கிருந்த பயணிகள் பாதுகாப்பாகக் காங்டாக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, கனத்த பனிப்பொழிவு காரணமாகச் சோம்கோ ஏரி மற்றும் நாதுலா போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. "சாலைகள் பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்ட பின்னரே பயணம் தொடர அனுமதிக்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் அனந்த் ஜெயின் எச்சரித்துள்ளார். மார்ச் 9-ஆம் தேதிதான் திறக்கப்பட்ட இந்தச் சாலை, மீண்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!