undefined

சிம்பு பட இணை தயாரிப்பாளர்   போதைப்பொருள் வழக்கில் கைது !  

 
 

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றிய சர்புதீன், தற்போது சென்னையில் போதைப்பொருள் விற்பனை குற்றச்சாட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பரிமாற்றத்தில் அவர் தொடர்புள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் கண்காணிப்பு போட்டிருந்தனர்.

இதையடுத்து எல்டாமஸ் சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது காரிலிருந்து ரூ.27.5 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. பார்ட்டிகள் நடத்தப்பட்ட போது சினிமா வட்டாரத்தைச் சேர்ந்த சிலரும் கலந்து கொண்டதாகவும், போதைப்பொருள் பரிமாற்றம் நடந்ததாகவும் ரகசிய தகவல்கள் கிடைத்ததை அடுத்து சர்புதீனை நிபிசிடி அதிகாரிகள் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட பணத்தின் மூலமும், போதை விற்பனை நெட்வொர்க்கும் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ‘ஈஸ்வரன்’ படக்குழுவினர் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த நிலையில், சினிமா துறையின் மீது மீண்டும் கேள்விக்குறி எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!