undefined

சிங்கப்பூரின் கட்டுமான நாயகி... 'மரப்பெண்' லாவ் குய் யிங் காலமானார்!

 

சிங்கப்பூரின் அடையாளமான சிவப்புத் தலைப்பாகை அணிந்த 'சம்சுய்' (Samsui) பெண்களில் ஒருவரான லாவ் குய் யிங், முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். 

1920-கள் முதல் 1940-கள் வரை சீனாவிலிருந்து பிழைப்புத் தேடி சிங்கப்பூருக்கு வந்த கடும் உழைப்பாளிகள் இவர்கள். இவர்கள் எப்போதும் தலையில் சிவப்பு நிறத் துணியால் ஆன தலைப்பாகை (Red Headgear) அணிந்திருப்பார்கள். இது வெயிலிலிருந்து பாதுகாப்பதோடு, அவர்களின் கடின உழைப்பின் அடையாளமாகவும் திகழ்ந்தது.

சிங்கப்பூரின் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வானளாவிய கட்டிடங்களைக் கட்டுவதில் இவர்களின் பங்கு அளப்பரியது. கனமான செங்கற்கள் மற்றும் சிமெண்ட் மூட்டைகளைச் சுமந்து சிங்கப்பூரை ஒரு நவீன நாடாக மாற்ற இவர்கள் முதுகெலும்பாக இருந்தனர்.

லாவ் குய் யிங் தனது 19வது வயதில் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்தார். சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டுமானத் துறையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றினார். இன்றைய சிங்கப்பூரின் பல முக்கிய அடையாளக் கட்டிடங்களில் இவரது வியர்வை படிந்துள்ளது.

வாழ்நாள் முழுவதும் மிகவும் எளிமையாகவும், சுயமரியாதையுடனும் வாழ்ந்த இவர், சிங்கப்பூரின் 'முன்னோடித் தலைமுறை' ஆளுமையாகப் போற்றப்பட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!