94 வயதில் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கும் புதிய திரைப்படம்!
பிரபல இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் தமிழ், தெலுங்கில் பல முன்னணி படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார். ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராஜன் போன்ற படங்கள் அவரது முன்னணி படைப்புகள். தொழில்நுட்ப ரீதியாகவும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் அவர் தனித்துவம் கொண்டவர்.
நடிகர் கமல் ஹாசன் இவரை ‘அபூர்வ சிங்கீதம்’ என சிறப்பித்து கொண்டாட்ட நிகழ்வு நடத்தி பாராட்டியுள்ளார். இளம் தலைமுறையின் காதலை பேசும் 61-வது திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த 94 வயதிலும் திரைப்படம் இயக்கும் அவர் இந்திய சினிமாவிற்கு வித்தியாசமான வலிமையை காட்டியுள்ளார். ரசிகர்கள் மற்றும் Cine உலகினருக்கு இது ஆச்சரியமும், பெருமையும் தரும் நிகழ்வாகும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!