undefined

 நாளை முதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு  … தமிழக வருவாய் துறை திடீர் முடிவு!  

 
 

தமிழகம், கேரളം, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) தமிழக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு அறிவித்துள்ளது. வீடு வீடாக கணக்கீட்டு விண்ணப்பங்களை வழங்குதல், அவற்றை மீட்டெடுத்து பதிவேற்றம் செய்வது போன்ற பொறுப்புகள் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட நிலையில், திட்டமிடல் மற்றும் பயிற்சி இல்லாமல் பணிகள் திணிக்கப்படுவதாக சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

கிட்டத்தட்ட 6 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், ஊழியர்கள் மீது அதிக பணிச்சுமை ஏற்படுவதாகவும், போதிய கால அவகாசமின்றி பணி நடப்பதாகவும் சங்கம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கூடுதல் பணிச்சுமைக்கு ஒருமாத ஊதியத்தைப் பரிசாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாளை முதல் எஸ்ஐஆர் பணிகளை புறக்கணிப்பதாக   அறிவித்துள்ளது.

இந்த முடிவால் படிவங்களை திரும்பப் பெறுதல், தகவல் பதிவேற்றம் போன்றவை தாமதமடையும் சூழல் உருவானுள்ளது. இதேசமயம், கேரளாவில் பிஎல்ஓ ஒருவர் பணி அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்னும் கவலைக்கிடமான பின்னணியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!