undefined

தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ?...  ஆர்.எஸ். பாரதி அதிர்ச்சி தகவல்!

 
 

தமிழ்நாட்டில் தற்போது சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) நடக்கிறது. இதன் காரணமாக சுமார் 85 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம். இந்த அதிர்ச்சித் தகவலை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், போலி பெயர்கள் ஆகியவை நீக்கப்படுவதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. டிசம்பர் 19-ல் வரைவுப் பட்டியல் வெளியான பிறகு முழு விவரம் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், தகுதியுள்ள வாக்காளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று திமுக கவனம் செலுத்தும். அவர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணியில் திமுக ஈடுபடும் என்றும் ஆர்.எஸ். பாரதி உறுதி அளித்தார். வாக்குச்சாவடி எண்ணிக்கையை அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் உயர்த்தியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் SIR பணி நடக்க வேண்டும் என்று நீதிமன்றம் போன ஒரே கட்சி அதிமுகதான் என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருவதைப் பற்றியும் ஆர்.எஸ். பாரதி பேசினார். "மோடி, அமித் ஷா அவசியம் வரணும். அப்போதான் 2024-ல் 39 தொகுதிகள் எப்படி 40 ஆனதோ, அதே போல் இப்போ 159 தொகுதிகள் 200-க்கும் அதிகமாக மாறும்," என்று அவர் கிண்டல் செய்தார். கடந்த தேர்தலில் மோடி 8 முறை வந்தும் எதுவும் எடுபடவில்லை என்றும் தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!