2 சிறுவர்கள், ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை... சாமியாருக்கு 178 ஆண்டுகள் சிறை... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
திருச்சி அருகே இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தேவாலய பாதிரியார் ஒருவருக்கு 178 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கைதான பாதிரியார் ஆரோக்கியராஜ், கடந்த சில ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி இன்று தனது இறுதித் தீர்ப்பை வழங்கினார். அதில், பிஞ்சு குழந்தைகளின் எதிர்காலத்தைச் சிதைத்த பாதிரியாரின் செயல் மன்னிக்க முடியாதது எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு மொத்தம் 178 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரே வழக்கில் ஒருவருக்கு இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர், சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இது ஒரு பாடமாக அமையும் என சமூக ஆர்வலர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். தேவாலயப் பணியில் இருந்துகொண்டே இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட பாதிரியாருக்குக் கிடைத்துள்ள இந்தத் தண்டனை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ள நீதியாகக் கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!