undefined

 நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து... பெரும் பரபரப்பு!

 
 

 

நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கும் படம் மற்றும் வெங்கட் பிரபு படத்தில் நடித்து வருகிறார். பிஸியான படப்பிடிப்பு சூழலில் அவர் தொடர்ந்து பயணித்து வருகிறார்.

இந்த நிலையில், சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சிவகார்த்திகேயன் சென்ற கார், முன்னால் சென்ற மற்றொரு காரின் மீது மோதியது. இதனால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த போக்குவரத்து காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இரு கார்களையும் ஓரம்கட்டி விசாரணை நடத்தினர்.

விபத்து நேரத்தில் காரிலிருந்து வெளியே வந்த சிவகார்த்திகேயன் காவலர்களுடன் பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. நல்வாய்ப்பாக இது லேசான விபத்தாக இருந்தது. யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!