undefined

ஆட்டோ மீது கார் மோதி பயங்கர விபத்து.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி..!! 

 

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக பலியாகினர்.

ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த ராய நாகேஸ்வரராவ் மற்றும் ராய வெங்கடேஸ்வர ராவ் இருவரும் பிரகாசம் மாவட்டம், கொமரோலுவில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காரில் சென்றிருந்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து இருவரும் மீண்டும் குண்டூர் நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.  காரை நாகேஸ்வரராவ் ஓட்டினார்.

பிரகாசம் மாவட்டம், அனந்தபூர் - அமராவதி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது குந்தாவில் இருந்து மார்க்காபுரம் நோக்கி 8 பயணிகளுடன் வந்த  ஆட்டோ மீது  கார் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர வேகத்தில் மோதியது. இதில் ஆட்டோ சுமார் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. காரின் இடிபாடுகளில்  சிக்கி நாகேஸ்வரராவ், ராய வெங்கடேஸ்வரா, ஆட்டோ டிரைவர் ஷேக் அபித் உசேன் ஆகியோர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து  விபத்தில்  சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆட்டோவில் பயணித்த  அபிநயா (12), டேனியல் (45) ரத்னாதேவி (9) ஆகியோர் இறந்தனர்.   மேலும் ஆட்டோவில் பயணம் செய்த வேளாண் கல்லூரி 3 மாணவிகள் மூன்று பேர் படுகாயத்துடன் மார்க்கபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!