பகீர்... பிரதமர் மோடியைக் கொல்லப் போட்ட ஸ்கெட்ச்... அமெரிக்க உளவு அமைப்பான 'CIA' உடன் பேரம்... பீகாரில் சிக்கிய பயங்கரவாதி சிறை!
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாக ஒரு நபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிம்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அந்த நபர் குறித்துக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், போலீசார் மின்னல் வேகத்தில் அதிரடிச் சோதனை நடத்தி அவரைச் சுருக்கினர்.
கைது செய்யப்பட்ட நபர் ஆஷா பத்ரி பகுதியைச் சேர்ந்த அமன் திவாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். பக்ஸார் எஸ்பி சுபம் ஆர்யா இது குறித்துக் கூறுகையில், "கைது செய்யப்பட்ட அமன் திவாரி பிரதமரைக் கொலை செய்யப் பயங்கரமான சதித்திட்டம் தீட்டியதுடன், இதனை அரங்கேற்ற ஒரு வெளிநாட்டு அமைப்பைத் தொடர்பு கொண்டுள்ளார்" எனத் தெரிவித்து அதிர வைத்தார். குறிப்பாக, அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வுக்கு (CIA) இந்த வேலையைச் செய்து முடிக்க ஒரு முன்மொழிவை அவர் அனுப்பியது விசாரணையில் அம்பலமானது.
இந்தச் சதித்திட்டத்தை நிறைவேற்றப் பல கோடி ரூபாய் தொகையைக் கோரியதுடன், தனது 'அசைன்மென்ட்டை' முடிக்க 22 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் அந்த நபர் பேரம் பேசியுள்ளது போலீசாரையே அதிர வைத்துள்ளது. சோதனையின் போது அவர் வீட்டில் இருந்து மடிக்கணினி மற்றும் முக்கிய மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவலின் அடிப்படையில் மேலும் இருவரைப் போலீசார் வளைத்துள்ளனர். ஒரு சாதாரண நபர் உலகத்தையே மிரட்டும் உளவு அமைப்புடன் தொடர்பு கொண்டது எப்படி? இதன் பின்னணியில் உள்ள மர்மக் கும்பல் யார்? என்பது குறித்துப் பாதுகாப்புத் துறையினர் தற்போது சல்லடை போட்டு விசாரித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!