6–8ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் சார் கல்வி கட்டாயம்... சிபிஎஸ்இ அதிரடி !
சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் சார் கல்வி இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் தனித்திறனை வளர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கணிதம், அறிவியல் போல் இதற்கும் சம முக்கியத்துவம் வழங்கப்படும்.
இந்த பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, கோடிங், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் இடம் பெறுகின்றன. மாணவர்கள் நடைமுறை அறிவை பள்ளிக் காலத்திலேயே பெற முடியும். புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள இது உதவும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஏட்டுப் படிப்பை தாண்டி தொழில்முறை திறன்களை வளர்க்க இது வழிவகுக்கும். மாணவர்களின் சிந்தனை திறன் மற்றும் புதுமை ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!