தூங்கிக் கொண்டிருந்த தம்பதி உயிரோடு எரித்துக் கொலை... கதவைப் பூட்டி பெட்ரோல் ஊற்றிய கும்பல்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, விவசாயி மற்றும் அவரது இரண்டாவது மனைவியை மர்ம நபர்கள் குடிசையோடு சேர்த்து பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியையே அதிர வைத்துள்ளது. பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (51), விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். முதல் மனைவி தமிழரசியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்த சக்திவேல், அமிர்தம் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, குத்தகைக்கு எடுத்த விவசாய நிலத்தில் ஓலைக்குடிசை அமைத்துத் தங்கியிருந்தார்.
நேற்றிரவு தம்பதியினர் இருவரும் ஆழமான உறக்கத்தில் இருந்தபோது, நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் ஒன்று குடிசையின் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டி சிறைவைத்துள்ளது. பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் குடிசை மீதும், உள்ளேயும் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளனர். தீ மளமளவெனப் பற்றி எரிந்ததும், அலறல் சத்தத்துடன் கண்விழித்த சக்திவேலும் அமிர்தமும் வெளியே வரப் போராடியுள்ளனர். ஆனால், கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவர்களால் தப்பிக்க முடியாமல், தீயின் பிடியில் சிக்கித் துடிதுடிக்க அங்கேயே கருகி உயிரிழந்தனர்.
இன்று காலை அந்த வழியாகச் சென்ற விவசாயிகள், குடிசை எரிந்து சாம்பலாகிக் கிடப்பதையும், உள்ளே தம்பதியினர் கரிக்கட்டையாகக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த செங்கம் போலீசார், உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமா அல்லது சொத்துப் பிரச்சினையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் இந்தத் துயரம் நடந்ததா என்றும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!