காஷ்மீரில் வரலாறு காணாத பனிப்பொழிவு: விமானம், ரயில், சாலை போக்குவரத்து முற்றிலும் ரத்து!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களாகவே சீரற்ற வானிலை எதிரொலித்துவரும் நிலையில், இன்று வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு பெய்து போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான பனி மற்றும் வெளிச்சமின்மை காரணமாக சுமார் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் பயணிகளுக்கு செல்போன் வழியாக தகவல் வழங்கி வருகின்றன.
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, முகல் சாலை, சோன்மார்க் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பனிச்சறுக்கல் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பனியால் பனிஹால் முதல் பாரமுல்லா வரையிலான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஓடுதளங்களில் குவிந்துள்ள பனியை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த கடும் பனிப்பொழிவின் பின்னணி குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது. வரும் 26ம் தேதி மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதால், வார இறுதி வரை பள்ளத்தாக்கில் பனிப்பொழிவு தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை உறுதி செய்த பின்னரே விமான நிலையத்திற்கு வருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!