ஊடக விளம்பரங்களுக்கு முன் அனுமதி கட்டாயம்... தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள வேளையில், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகும் அரசியல் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தத் தேர்தல் ஆணையம் புதிய மற்றும் கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது அதிகாரப்பூர்வமான எக்ஸ் (X), பேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளக் கணக்குகளின் விபரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் பொய்ச் செய்திகள் மற்றும் அவதூறுப் பிரச்சாரங்களைத் தடுக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்தல் ஆணையத்தின் முறையான 'அனுமதிச் சான்று' இல்லாமல் எந்தவொரு இணையதளத்திலோ அல்லது சமூக வலைதளப் பக்கங்களிலோ அரசியல் தொடர்பான விளம்பரங்களைப் பதிவிடக் கூடாது என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் போன்ற ஊடகங்களில் விளம்பரம் செய்ய விரும்பும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மீறினால் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் அந்த விளம்பரச் செலவு சேர்க்கப்படுவதுடன், தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் கடும் நடவடிக்கையும் பாயும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் 'பெயிட் நியூஸ்' (Paid News) கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த 'கிடுக்கிப்பிடி' போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் வேட்பாளர்கள் தற்போது தங்களது சமூக வலைதளக் கணக்குகளைச் சீரமைக்கும் பணியிலும், அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதிலும் பிஸியாக ஈடுபட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!