மாமனாரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன்!

 

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே குடும்பத் தகராறில் மருமகனே தனது மாமனாரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ், பிரித்திகா என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாகத் திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

பெண் குழந்தை பிறந்ததால் அதிருப்தியடைந்த சதீஷ், பிரித்திகாவைப் பிரிந்து தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இருப்பினும், தனது ஆண் குழந்தையை மட்டும் தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறி அடிக்கடி பிரித்திகாவின் வீட்டிற்குச் சென்று சதீஷ் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவு மீண்டும் மதுபோதையில் அங்கு சென்ற சதீஷுக்கும், அவரது மாமனார் ரவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சதீஷ் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து ரவியைச் சுட்டுவிட்டுத் தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ரவியை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த உமராபாத் போலிஸார், ரவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள கொலையாளி சதீஷைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!