undefined

வீட்ல தகராறு  … தந்தையை கல்லால் அடித்து கொலை செய்த மகன்!

 

கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒன்னக்கரசம்பாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன் (61) தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் அவ்வப்போது வேலை பார்த்து வந்தார். இவரது மகன் ராஜசேகரன் அன்னூர் பாரதி நகரில் தந்தைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்தார். வீட்டு உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது.

ஆர்டிஓ உத்தரவு, உயர்நீதிமன்ற தீர்ப்பு என வழக்கு நீண்ட நிலையில், மகன் மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டு ஆண்டுகளாக அந்த தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து தந்தை மீண்டும் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், ஆத்திரமடைந்த ராஜசேகரன் காரில் சென்று எதிரே வந்த தந்தையை மோதி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. பின்னர் தலையில் கல்லால் அடித்து கொலை செய்து தப்பியோடியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த அன்னூர் காவல் துறை விசாரணை நடத்தி, தலைமறைவான மகனை தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!