இறந்த தாய் போல வேடமிட்டு, 2 வருடங்களாக பென்ஷன் பெற்று வந்த மகன்!
இத்தாலியின் போர்கோ விர்ஜிலியோ நகரை சேர்ந்த கிராசியெல்லா டால்ஒக்லியோ 2022-ஆம் ஆண்டு 82 வயதில் மரணமடைந்தார். ஆனால் அவரது மரணம் குறித்து அரசு பதிவு செய்யாமல், உடலை பதப்படுத்தி வீட்டில் மறைத்துப் போட்டதாக போலீசார் கண்டறிந்துள்ளனர். காரணம்– அவரது ஓய்வூதியம். தாயின் பெயரில் வரும் தொகையை தொடர்ந்து பெற வேண்டி, மகன் 56 வயதும் ஆனாலும் பெண் வேடமிட்டு அரசுத் துறைக்கு சென்று தொகையை பெற்றுவந்தது தெரிய வந்தது.
சமீபத்தில் அடையாள அட்டையை புதுப்பிக்க அரசு அலுவலகம் சென்றபோது ஊழியருக்கு சந்தேகம் எழுந்தது. 80 வயது முதியவரின் தோல் அமைப்பைப் போல் இல்லை, முகத்திலும் கைகளிலும் இயல்பில்லாத மாற்றங்கள் இருந்ததாக போலீசாரிடம் ஊழியர் தெரிவித்தார். உடனடியாக அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது, தாயின் உருவில் அவர் தொடர்ந்து ஓய்வூதியத்தை பெற்றது உறுதியானது.
மொத்தம் ரூ.80 லட்சம் மதிப்புள்ள தொகையை இரண்டு ஆண்டுகளாக சுருட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் வீட்டில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கிராசியெல்லாவின் உடலையும் மீட்ட போலீசார், அந்த நபரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!