undefined

  சோனியா காந்தி உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதி !  

 


 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி. இவர் திடீர்  உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன.

 
78 வயதான சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது நிலையாக இருந்து வருவதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சோனியா காந்தியின் உடல்நலம் குறித்த செய்திகள் வெளியானதையடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரது விரைவான குணமடைய வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர்.


கட்சியின் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மருத்துவமனையில் அவரை சந்தித்து நலம் விசாரித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சி, சோனியாவின் உடல்நிலை குறித்து அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடவில்லை. அவரது சிகிச்சை முறையாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதே சமயம், மருத்துவமனை வட்டாரங்கள், சோனியாவின் சிகிச்சை முடிந்தவுடன் மேலதிக விவரங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது