undefined

சோனியா காந்தி  சிகிச்சை முடிந்து  வீடு திரும்பினார் !  

 
 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (79), உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 5 மணியளவில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சோனியா காந்திக்கு இருமல் பிரச்சினை இருந்ததாகவும், டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. சிகிச்சையின் போது பெரிய சிக்கல்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சோனியா காந்தி, தனது இல்லத்தில் ஓய்வுடன் மேலதிக சிகிச்சையைத் தொடருமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி, காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!