ரூ.75 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை தென்னாப்பிரிக்க பெண்கள்!
இந்தியாவில் டில்லியிலிருந்து பெங்களூக்கு விமானம் மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இரு பெண்கள் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், பெங்களுாரு எலக்ட்ரானிக் சிட்டிக்கு அருகிலுள்ள நீலாத்ரி நகரில் அவர்களிடம் இருந்து ரூ.75 கோடி மதிப்புள்ள 37.870 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் செயல்பட்டு வந்த பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அடோனிஸ் ஜபுலைல் (31), அபிகேல் அடோனிஸ் (30) இருவரும் டில்லியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கைது சம்பவத்தில் முதன்முதலாக மங்களூர் பகுதியில் 15 கிராம் போதைப் பொருள் விற்பனை செய்ததாக ஹைதர் அலி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிசிபி-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு, பெங்களூரில் பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலைப் பிடிக்க வழிவகுத்துள்ளது. இது சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையில் நைஜீரிய நாட்டில் வசித்து வரும் பீட்டர் இகேடி பெலோன்வு என்பவர் கைது செய்யப்பட்டு 6.248 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது, தென்னாப்பிரிக்க பெண்கள் குறித்து தெரியவந்தது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!