53 ஆண்டுகளுக்குப் பிறகு 4 விண்வெளி வீரர்களுடன்  நிலவுக்கு சென்ற விண்கலம்!  

 

அமெரிக்காவும் ரஷியாவும் கடந்த நூற்றாண்டில் நிலவு குறித்த ஆய்வுகளில் தீவிரமாகப் போட்டியிட்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பிப் பல்வேறு சாதனைகளைப் படைத்தன. இருப்பினும், கடந்த சில தசாப்தங்களாக இரு நாடுகளும் நிலவு குறித்த நேரடி ஆய்வுகளைக் கைவிட்டிருந்த நிலையில், தற்போது 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பிரம்மாண்டமான பணியை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கையில் எடுத்துள்ளது. விண்வெளி ஆய்வில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் இந்தத் திட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாசாவின் இந்த 'ஆர்டெமிஸ் - 2'  திட்டமானது வெறும் நிலவுப் பயணத்துடன் நின்றுவிடாமல், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஒரு முன்னோடிப் பயிற்சி மையமாக நிலவைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. நிலவில் உள்ள கனிம வளங்களை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் அங்கு மனிதர்கள் தங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக 3 அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு கனடா விண்வெளி வீரர் என மொத்தம் 4 பேர் கொண்ட குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதிசக்தி வாய்ந்த எஸ்.எல்.எஸ்   ராக்கெட் மூலம் நாசாவின் 'ஓரியன்' விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் பயணிக்கும் நான்கு வீரர்களும் நிலவின் இதுவரையிலும் மனிதர்கள் கால் தடம் பதிக்காத, சென்றிராதப் பகுதிகளுக்குச் சென்று விரிவான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ஏவப்பட்டுள்ள இந்த விண்கலம், நிலவு குறித்த மர்மங்களை விடுவிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளிப் பயண வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!