கிரீன்லாந்து மீது அமெரிக்கா போர் தொடுத்தால்... ஸ்பெயின் கடும் எச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விருப்பம் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கடும் எதிர்வினை அளித்துள்ளார். இந்த கருத்து சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கிரீன்லாந்து மீது அமெரிக்கா படையெடுத்தால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினே உலகின் மிக மகிழ்ச்சியான மனிதராக மாறுவார் என சான்செஸ் தெரிவித்துள்ளார். இதனால் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் நியாயப்படுத்தப்படும் சூழல் உருவாகும் என்றார். இது ரஷ்யாவின் அத்துமீறல்களுக்கு மறைமுக ஆதரவாக மாறும் என்றும் எச்சரித்தார்.
மேலும், அமெரிக்கா ராணுவ பலத்தை பயன்படுத்தினால் அது நேட்டோ அமைப்பின் முடிவுக்கான தொடக்கமாகும் என்றும் சான்செஸ் கூறினார். இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டங்களை அமெரிக்காவே மீறினால், நேட்டோவின் நம்பகத்தன்மை சிதையும் என்றார். அவரது இந்த கருத்துக்கு பல ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!