இளைஞரின் வயிற்றுக்குள் ஸ்பேனர், டூத் பிரஷ்… ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் நீண்ட நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவரது வயிற்றுக்குள் இரும்பு ஸ்பேனர் மற்றும் டூத் பிரஷ் இருப்பது தெரியவந்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சிகிச்சையில் வயிற்றிலிருந்து 2 இரும்பு ஸ்பேனர்கள் மற்றும் 7 டூத் பிரஷ்கள் அகற்றப்பட்டன. சிக்கலான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றினர்.
சிகிச்சைக்குப் பிறகு இளைஞர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பதும், அதனால் இத்தகைய பொருட்களை விழுங்கியிருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!