இன்று முதல் ஓசூர் கிருஷ்ணகிரி வழியாக சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்!
சபரிமலை மண்டல, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஐயப்ப பக்தர்கள் எளிதில் பயணம் செய்யும் வகையில் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் வெள்ளிக்கிழமை (நவ.28) முதல் இயக்கப்படுகின்றன. குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த சேவைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 16 வரை தொடர உள்ளன.
சபரிமலை தேவஸ்தானத்தின் கோயில் நடை மூடல் காரணமாக டிசம்பர் 26 முதல் 29 வரை இந்த சேவைகள் இடைநிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அதிக பக்தர்கள் பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுவதால், சென்னை உட்பட பிற நகரங்களிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என பேருந்து கழகம் தெரிவித்துள்ளது. குழுவாகப் பயணிப்போருக்கு வாடகை பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்பதிவு இணையதளம், பசநபஇ செயலி மூலம் செய்யலாம். பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் பதிவு செய்தால் நெரிசலைத் தவிர்க்கலாம். மேலும் தகவல்களுக்கு 94450 14424, 94450 14463 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!