அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை!
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ-மாணவிகள் தேர்வுகளை எழுதிய நிலையில், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஏற்கனவே தேர்வு முடிந்திருந்தது. மீதமுள்ள வகுப்புகளுக்கும் இன்று தேர்வு நிறைவு பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது. 12 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 4-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும். ஜனவரி 5-ம் தேதி திங்கட்கிழமை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனிடையே, விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இசை, நடனம், ஓவியம் போன்ற கலைத் துறைகளில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தரவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!