வளைகுடா பதற்றம்… இந்தியர்களுக்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறப்பு!
இந்திய வெளியுறவுத்துறை வளைகுடா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் சூழ்நிலையை முன்னிட்டு சிறப்பு கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உடனடி உதவி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவசர தேவைகளுக்கு நேரடி தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் 1800118797 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு உதவி கோரலாம். மேலும் +91 11 2301 2113, +91 11 2301 4104, +91 11 2301 7905 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். அதிகாரிகள் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தேவையான தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
பஹ்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்கள் அவசர உதவிக்காக +97339418071 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அங்கு உள்ள இந்திய தூதரகம் தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அமைதியாக இருக்கவும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!