பிப்ரவரி 1ம் தேதி பௌர்ணமி கிரிவலம்… விழுப்புரம்–திருவண்ணாமலை சிறப்பு ரயில் இயக்கம்!
விழுப்புரத்திலிருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06130) பிற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இந்த ரயிலில் 8 பெட்டிகள் இடம்பெறும்.
இந்த சிறப்பு ரயில் வெங்கடேஷ்புரம், மாம்பலப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பௌர்ணமி நாளில் பக்தர்கள் அதிகளவில் பயணம் செய்வதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!