undefined

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - தாம்பரம், திருநெல்வேலியில் இருந்து நேரடி சேவை!

 

கார்த்திகை மகாதீபத் திருவிழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதால், தெற்கு ரயில்வே சார்பில் பக்தர்களின் வசதிக்காக முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தாம்பரம் - திருவண்ணாமலை சிறப்பு மெமு ரயில் : சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்களுக்காக, தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவு இல்லாத (MEMU) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தச் சிறப்பு ரயில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு நாட்களும் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து காலை 9:15 மணிக்குப் புறப்படும் ரயில், மதியம் 1:30 மணிக்குத் திருவண்ணாமலை சென்றடையும். திருவண்ணாமலையில் இருந்து மாலை 5 மணிக்குத் புறப்பட்டு, இரவு 9:00 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும்.

தென் மாவட்ட பக்தர்களுக்கான சிறப்பு ரயில்

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக, திருநெல்வேலியில் இருந்து திருவண்ணாமலைக்கு ஒரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. டிசம்பர் 3ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 9:30 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்குத் திருவண்ணாமலைக்கு வரும். திருவண்ணாமலையில் இருந்து டிசம்பர் 4ஆம் தேதி இரவு 7:55 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்குத் திருநெல்வேலியைச் சென்றடையும்.

சென்னை வழியாகச் செல்லும் வட்டப்பாதை ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பி, திருவண்ணாமலை வழியாக வட்டப்பாதையில் செல்லும் ஒரு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு ரயில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் காலை 9:15 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். இது அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், தாம்பரம் வழியாகச் சென்று இரவு 7:00 மணிக்குச் சென்னை கடற்கரை நிலையத்தை வந்தடையும்.

விழுப்புரம் - திருவண்ணாமலை இணைப்பு ரயில்கள்

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு மெமு (MEMU) ரயில்கள் இயக்கப்படுகின்றன: டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து காலை 10:10 மணிக்கு ரயில் புறப்பட்டு 11:45 மணிக்குத் திருவண்ணாமலை சென்றடையும். அதே நாட்களில், திருவண்ணாமலையில் இருந்து பகல் 12:40 மணிக்குத் திரும்பி, 2:15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!