undefined

 கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ..... நாளை முதல் சிறப்பு ரயில்கள் ! 

 
 

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மங்களூரிலிருந்து அதிகாலை 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் 24 மற்றும் 31-ம் தேதிகளில் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.

மறுமார்க்கமாக, டிசம்பர் 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் 25 மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளில் மங்களூரை சென்றடையும். பண்டிகை கால பயணிகளை கருத்தில் கொண்டு இந்த சேவை இயக்கப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. கூட்ட நெரிசலை குறைப்பதே இதன் நோக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, வேளாங்கண்ணி கிறிஸ்துமஸ் விழாவுக்காக செகந்திராபாத்திலிருந்து டிசம்பர் 23-ம் தேதி இரவு 7.25 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். இது 24-ம் தேதி மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். மறுமார்க்கத்தில் 25-ம் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் ரயில், 26-ம் தேதி காலை 6.10 மணிக்கு செகந்திராபாதை சென்றடையும். இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!