undefined

  சேலம் வழியாக மைசூர்–தூத்துக்குடி, பெங்களூரு–கேரளா சிறப்பு ரயில்கள்!

 
 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால், சேலம் வழியாக பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மைசூரில் இருந்து தூத்துக்குடி, பெங்களூரில் இருந்து கொல்லம் மற்றும் கண்ணூர் செல்லும் வகையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பண்டிகை கால பயணிகள் பெரிதும் நிம்மதி அடைந்துள்ளனர்.

மைசூரில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி மாலை 6.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், பெங்களூரு, சேலம், நாமக்கல், கரூர், மதுரை வழியாக அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கத்தில், ஜனவரி 14ஆம் தேதி தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.45 மணிக்கு மைசூரை அடையும்.

அதேபோல், ஜனவரி 13ஆம் தேதி பெங்களூரில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சேலம் வழியாக கொல்லம் சென்றடையும். கண்ணூருக்கும் பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை குறைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!