ஸ்பைஸ்ஜெட் புறப்பட்ட சில நிமிடங்களில் இயந்திர கோளாறு… விமானம் அவசரமாக தரையிறக்கம்!
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பயணிகள் விமானம் தில்லியில் இருந்து லே நோக்கி செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது. காலை 6.45 மணியளவில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்யில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் 150 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட சில நிமிடங்களில் இரண்டாவது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
உடனடியாக முழு அவசர தரையிறக்கத்திற்காக அனுமதி கோரப்பட்டது. தில்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர் விமானம் திரும்பி தரையிறக்கப்பட்டது.
எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து பயணிகளும் நலமாக உள்ளனர் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இயந்திர கோளாறு ஏற்பட்ட காரணம் குறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்த உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!