undefined

 போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயற்சித்த இலங்கை பெண்மணி…  !

 
 

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் போலி இந்திய பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் மற்றும் பங்களாதேஷ் நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 16-ம் தேதி ஐக்கிய அரபு நாடு செல்ல முயன்ற முகமது அல் அமீன் என்பவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த அதிகாரிகள், அது போலி என கண்டறிந்தனர். இதேபோல், 17-ம் தேதி இலங்கை செல்ல முயன்ற பிரியதர்ஷினி சத்தியசிவத்தின் பாஸ்போர்ட்டும் போலியானது என தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். விசாரணையில், பங்களாதேஷை சேர்ந்த முகமது அல் அமீன், 2011-ம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் போலியாக பெற்று, இந்திய பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்றது தெரியவந்தது.

அதேபோல், இலங்கையை சேர்ந்த பிரியதர்ஷினி, 2024-ம் ஆண்டு சுற்றுலா விசாவில் இந்தியா வந்து, திருச்சியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் போலி இந்திய ஆவணங்கள் பெற்றதாக விசாரணையில் வெளிவந்தது. இருவரிடமிருந்தும் போலி பாஸ்போர்ட்கள், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!