இலங்கை பெண் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட்!
சென்னை பன்னாட்டு விமான நிலையம் வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் அளித்த புகாரில் அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. இலங்கை நாட்டைச் சேர்ந்த பேபி லோனா என்ற பெண் போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டு பெற்றதாக கூறப்பட்டது. தனது குடியுரிமையை மறைத்து இலங்கைக்கு செல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடைபெற்றது. விசாரணையில் அந்த பெண்ணின் பெற்றோர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்தியரை திருமணம் செய்து 2015ஆம் ஆண்டு விமானம் மூலம் இந்தியா வந்துள்ளார். பின்னர் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் வாடகை வீட்டில் தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஆதார் அட்டை, நிரந்தர கணக்கு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் இந்திய கடவுச்சீட்டும் பெற்றதாக தகவல் வெளியானது. இலங்கைக்கு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார். கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!