undefined

இலங்கை அதிருப்தி... காலாவதியான பொருட்களை நிவாரணமாக அனுப்பிய பாகிஸ்தான்! 

 

வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் மற்றும் தொடர் கனமழை காரணமாகப் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள அண்டை நாடான இலங்கைக்குப் பல்வேறு நாடுகள் நிவாரண உதவிகளை அனுப்பி வருகின்றன. இந்தச் சூழலில், பாகிஸ்தான் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களில் 2024ஆம் ஆண்டிலேயே காலாவதியான பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், இலங்கை அரசு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதல் இலங்கையில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருகிறது. இதனுடன் 'டிட்வா' புயலின் தாக்கமும் சேர்ந்து கொண்டதால், நாடு முழுவதும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்த தகவலின்படி, கனமழையில் சிக்கி இதுவரை 330-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர், மேலும் 400 பேர் காணாமல் போயுள்ளனர். இந்தத் துயரமான நிலையில், வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் அவசர உதவிக்காகக் காத்திருக்கின்றனர்.

இலங்கையின் துயரத்தைப் போக்க இந்தியா சார்பில் உடனடியாக ‘ஆபரேசன் சாகர்பந்து’ நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியக் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் கூடாரங்கள், போர்வைகள், உணவுப் பொருட்கள் உட்பட மொத்தம் 53 டன்கள் நிவாரணப் பொருட்கள் உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இலங்கைக்கு உதவி வருவதாக அறிவித்தன. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் விமானம் மூலம் மருந்துப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தது.

பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொட்டலங்களைப் பிரித்து ஆய்வு செய்த இலங்கை அதிகாரிகள், பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். பாகிஸ்தான் அனுப்பிய அந்தப் பொருட்களில், 2024ஆம் ஆண்டு காலாவதியான தேதியைக் கொண்ட பல பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவசரகாலத் தேவைக்காக அனுப்பப்பட்ட மருந்து மற்றும் உணவுப் பொருட்களில் பல காலாவதியான நிலையில் இருந்ததாலும், வேறு சில பொருட்கள் பயன்படுத்த முடியாதவையாக இருந்ததாலும், அவை நிவாரண உதவிக்குப் பயனற்றவையாகிப் போனது. பேரிடரில் சிக்கி உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காமல் அவதிப்படும் மக்களுக்கு, காலாவதியான பொருட்களை அனுப்பிய பாகிஸ்தானின் செயல், இலங்கையின் பேரிடர் நிர்வாகம் மற்றும் வெளிவிவகாரத் துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த அலட்சியம் குறித்து இலங்கையின் பேரிடர் நிர்வாகத் துறை மற்றும் வெளிவிவகாரத் துறையினர் தீவிர கவனத்தில் எடுத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானிடம் இந்த அலட்சியமான செயல் குறித்து இலங்கை அரசு தனது அதிருப்தியைத் தூதரக அளவிலும், வேறு வழிகளிலும் வெளிப்படுத்தியுள்ளது. பேரிடர் நேரத்தில் மனிதாபிமான உதவியாக அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருட்கள், காலாவதியான நிலையில் இருப்பது, இராஜதந்திர ரீதியாகவும், மனிதாபிமான ரீதியாகவும் ஒரு மோசமான செயலாகக் கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!