undefined

நம்பரை பிளாக் செய்ததால் காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த காதலி! 

 
 

சத்தீஸ்கர் மாநிலத்தில் காதல் பிரச்சினையால் இளம்பெண் ஒருவர் தனது காதலனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஷினி சூர்யவன்ஷி (22) என்ற இளம்பெண், தனது காதலன் கம்தா பிரசாத் செல்போன் எண்ணை பிளாக் செய்ததால் ஆத்திரமடைந்துள்ளார்.

இதையடுத்து அவர் காதலன் வீட்டிற்கு நேரடியாக சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தன்னை விட்டு வேறு பெண்ணுடன் பழகுவதாக சந்தேகித்து ஆத்திரமடைந்த ரோஷினி, கம்தா பிரசாத்தை மார்பில் கத்தியால் சரமாரியாக குத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த கம்தா பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் ரோஷினியை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!