undefined

ஆளுநர் செயல் பதவிக்கு அழகல்ல ... முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

 

ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்க இருந்த நிலையில், இன்று காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் அவை தொடங்கியது. தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என கூறி, கடந்த 2 ஆண்டுகளைப் போலவே ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினார். தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது மட்டுமே மரபு என சபாநாயகர் விளக்கினாலும், அதனை ஏற்க மறுத்து ஆளுநர் வெளியேறினார்.

ஆளுநர் வெளியேறியதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என கடுமையாக விமர்சித்தார். அரசமைப்பு சட்டத்தை வேண்டுமென்றே மீறியதாகவும், நூற்றாண்டு மரபும் நீண்ட பாரம்பரியமும் கொண்ட மக்கள் சபையை அவமதிக்கும் செயலாக இது அமைந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதை இப்பேரவை ஏற்கவில்லை என்றும், உரை வாசிக்கப்பட்டதாகவே கருதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக அறிவித்தார். ஆளுநர் உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும், வெளிநடப்பு பதிவு செய்யப்படாது என்றும் தெரிவித்தார். ஆண்டு தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையில் மாற்றம் கொண்டு வரவும், தேவைப்பட்டால் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!