undefined

 எதிரிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது... திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்! 

 
 

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மதுரையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசினார். சூழ்நிலை சாதகமாக இருந்தாலும் எதிரிகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என அவர் எச்சரித்தார். CBI, ED, IT, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்றார்.

தினந்தோறும் பொய்கள் பரப்பப்படும் என்றும் போலி பிம்பங்கள் உருவாக்கப்படும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார். இவற்றை எதிர்கொள்ள கட்சியின் பலத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றார். எத்தனை எதிரிகள் வந்தாலும், தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது உதயசூரியன்தான் என உறுதியளித்தார்.

2021-ல் பெற்ற வாக்குகளைவிட இம்முறை கூட்டணி கூடுதல் வாக்குகளை பெறும் என்றார். மக்கள் நலத் திட்டங்களால் கோடிக்கணக்கானோர் பயனடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” திட்டத்தை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தினார். ஒன்றுபட்டு செயல்பட்டால் 2026-ல் திமுக ஆட்சிதான் என்ற நம்பிக்கையை அவர் ஊட்டினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!