200 தொகுதிகளை தாண்டி வெற்றி பெறுவோம்... ஸ்டாலின் ஆவேசம்!
கொளத்தூரில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். தமிழர் திருநாளாம் பொங்கல் தமிழக மக்களின் ஒற்றுமை, வளர்ச்சி, நலனை காட்டும் நாளாக இருப்பதாக கூறினார். கொளத்தூர் தொகுதியில் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது தனக்கு கூடுதல் உற்சாகமும் புதிய எனர்ஜியும் கிடைப்பதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
2026 சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய முதலமைச்சர், திமுக தொண்டர்களின் உழைப்பை நினைவுகூர்ந்தார். “திமுக காரன் மாதிரி யாரும் வேலை செய்ய முடியாது. ஒரு டீ குடிச்சிட்டு பம்பரமா வேலை செய்வான்” என்று முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் கூறியதை சுட்டிக்காட்டினார். தேர்தல் பணிகளில் 50 சதவீதம் ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும், மீதமுள்ள பணிகளை விரைவில் முடிப்போம் என்றும் தெரிவித்தார்.
வெற்றி குறித்து முழு நம்பிக்கை இருப்பதாக ஸ்டாலின் கூறினார். “200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம் என்று சொன்னேன். இப்போது நாம் செய்த பணிகளைப் பார்த்தால் 200-ஐ தாண்டியும் வெற்றி பெறுவோம்” என்றார். திமுக தொண்டர்கள் முழு சபதத்துடன் செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்த இந்த உரை, தேர்தல் களத்தில் கட்சிக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!