சொன்னதை செய்யும் திராவிட மாடல்... ஸ்டாலின் பெருமிதம்!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படைக் கொள்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார். “சமூகநீதி, சமத்துவம், சமூக நல்லிணக்கம் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அரசே திராவிட மாடல் அரசு” என்று அவர் தெளிவுபடுத்தினார். எதிர்க்கட்சிகளால் முடியாது என்று கூறப்பட்ட திட்டங்களையும் நிறைவேற்றியதாகவும், தமிழகத்தின் திட்டங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று மக்கள் பயனடைவதை பார்க்க மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
ஸ்டாலின், திமுக ஆட்சியின் சாதனைகளை பல மாநிலங்கள் பின்பற்றி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். “தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள், நம்பிக்கை மற்றும் பேராதரவை வழங்கி திராவிட மாடல் அரசை அசைக்க முடியவில்லை. திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டனர்” என்றும், பெண்கள் நலத்திட்டங்களின் ஆதரவு திமுகவுக்கு பெரும் பலமாக உள்ளது என்று வலியுறுத்தினார்.
அதிமுக – பாஜக கூட்டணியை கடுமையாக சாடிய ஸ்டாலின், “பாஜகவுடன் இருப்பவர்கள் எல்லோரும் ஊழல்வாதிகள். உச்சநீதிமன்றம் வரை சென்றவர்களும் தண்டிக்கப்பட்டவர்கள். கூட்டணியில் இல்லாத சமயத்தில் அதிமுக மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தீர்கள். இப்போது Washing Machine-ல் அவர்களை எல்லாம் வெளுத்துட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். 2026 சட்டமன்றத் தேர்தலை “தமிழ்நாடு Vs என்டிஏ” கோணத்தில் நடக்கிறது என்றும், என்டிஏ கூட்டணி கட்டாயப்படுத்தப்பட்ட துரோகக் கூட்டணி என குற்றம்சாட்டினார். மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம் மற்றும் கோயில்களுக்கு குடமுழுக்கு உள்ளிட்ட சாதனைகள் திமுக வெற்றியின் அடிப்படை என்று அவர் வலியுறுத்தி பேசியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!