ஸ்டாலின் பெருந்தன்மை நெகிழ வைத்தது... முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி  கட்ஜூ பதிவு! 

 
 

உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரையில் ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற்ற கேரள உயர்நீதிமன்ற நீதிபதி நிஷாபானுவின் மகன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த சந்திப்புக்குப் பிறகு, ஸ்டாலின் குறித்த தனது பார்வை மாற்றம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்பாகவே மேடையில் அமர்ந்திருந்ததாக கூறிய கட்ஜூ, பின்னர் கீழே வந்து முன் வரிசை நாற்காலியில் அமர்ந்ததாக தெரிவித்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் அங்கு வந்ததாகவும், மேடையில் மணமக்களை வாழ்த்தியபோது, தானும் அங்கு இருப்பதை அவரிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டதும் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக கீழே வந்து தன்னை சந்தித்ததாக கட்ஜூ தெரிவித்துள்ளார். ‘உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நீங்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வர வேண்டும்’ என அவர் கூறியதாகவும், உதவுவதில் மகிழ்ச்சி என பெருந்தன்மையுடன் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு தன்னை விமர்சித்திருந்ததை அறிந்திருந்தும், மரியாதையுடன் நடந்துகொண்டது தன்னை நெகிழ வைத்ததாக கட்ஜூ தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!